வைர மோதிரத்தை திருடி கழிவறையில் போட்ட பெண் ஊழியர் கைது!
female employee throwing diamond ring in toilet
வைர மோதிரத்தை திருடி போலீசாருக்கு பயந்து கழிவறையில் தூக்கி வீசிய பெண் ஊழியர்:
தெலுங்கானா: ஐதராபாத் போஸ் ஜூப்ளி பகுதியில் உள்ள அழகு நிலையத்துக்கு முடி அலங்காரம் செய்ய ஒரு பெண் வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் கையில் இருக்கும் வைர மோதிரத்தை கழற்றுமாறு அங்கிருந்து பெண் ஊழியர் தெரிவித்துள்ளார்.
உடனே அந்த பெண் தனது விரலில் இருந்த ரூ.30 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பிலான வைர மோதிரத்தை கழற்றி ஊழியரிடம் கொடுத்தார். பெண் ஊழியர் அந்த மோதிரத்தை வாங்கி ஒரு பெட்டியில் வைத்துள்ளார். பிறகு முடி அலங்காரம் செய்து முடிந்த உடனே அந்த பெண் மோதிரத்தை மறந்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனால் பெண் ஊழியர் அந்த வைர மோதிரத்தை எடுத்து தனது பையில் மறைத்து வைத்தார். பெண் வாடிக்கையாளர் அழகு நிலையத்திற்கு சிறிது நேரம் கழித்து பதற்றத்துடன் வந்து மோதிரம் குறித்து அங்கிருந்தவர்களிடம் கேட்டுள்ளார். ஆனால் யாரும் அது பற்றி தெரியாது என கூறியதால், அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதனால் அந்த ஊழியர்,போலீசில் மாட்டிக்கொள்வோம் என நினைத்து அவர் அழகு நிலையத்தில் இருந்த கழிவறைக்கு சென்று திருடிய மோதிரத்தை கழிறைக்குள் வீசி அதில் தண்ணீரை ஊற்றியதால் அந்த மோதிரம் குழாய் வழியாக சென்றுவிட்டது.
இந்நிலையில் போலீசார் கடைக்கு வந்து பெண் ஊழியரிடம் நடத்திய விசாரணையில் அவர் உண்மையை தெரிவித்து விட்டார். பின்னர் போலீசார் அவரை கைது செய்து, பிளம்பர் உதவியுடன் கழிவுநீர் செல்லும் குழாயில் இருந்த வைர மோதிரத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
English Summary
female employee throwing diamond ring in toilet