#BigBreaking || பள்ளி, கல்லூரிகள் மூடல் - இரவுநேர ஊரடங்கு அமல்.! சற்றுமுன் வெளியான அதிரடி உத்தரவு.!
goa night time lockdown
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் தற்போது தீவிரமடைந்து உள்ளது. மேலும் இந்தியாவில் இது கொரோனா மூன்றாவது அலைக்கன அறிகுறி என்றும் சொல்லப்படுகிறது. தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளை மூடுவதற்கு உண்டான உத்தரவுகள் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
மேலும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் பல்வேறு மாநிலங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை பொருத்தவரை ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் வருகின்ற 10ஆம் தேதி வரை மூடப்படுகிறது.
இதேபோல், ஹரியானா மாநிலத்தில் கொரோனா மற்றும் உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஜனவரி 12ம் தேதி வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.அதன்படி, மாநிலத்தில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மசாஜ் சென்டர்கள், சலூன்கள், அழகு நிலையங்களை நாளை முதல் மூட உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் தொடர்ந்து கோவாவிலும் பள்ளி, கல்லூரிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், கொரோனா மற்றும் உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அதனை கட்டப்படுத்தும் வகையில் கோவா.,வில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.