கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்தவர் எம்.ஜி.ஆர் - விஜய் புகழாரம்!
TVK Vijay Wish ADMK MGR 108 birthday
அதிமுக நிறுவனத் தலைவரும் மறைந்த தமிழக முதலமைச்சருமான எம்.ஜி.இராமச்சந்திரனின் 108வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வி கே சசிகலா, முன்னாள் முதலவர் ஓபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
"அளவற்ற வறுமையைத் தாண்டினார்.
கூத்தாடி என்ற கூற்றைச்
சுக்குநூறாக உடைத்து,
தமிழக அரசியல் வரலாற்றின்
மையம் ஆனார்.
அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார்.
அவரே தமிழக அரசியலின்
அதிசயம் ஆனார்.
இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப்
பிறந்தநாள் வணக்கம்" என்று விஜய் தெரிவித்துள்ளார்.
English Summary
TVK Vijay Wish ADMK MGR 108 birthday