சிறந்த இயக்குநர்கள் பட்டியலில் என் பெயர் இல்லை; இயக்குநர் சுந்தர் சி கவலை..!
Director Sundar C about madha kaja raja part 02
மதகஜராஜா திரைப்படத்தின் வெற்றி விழாவில் தன் பெயரை நல்ல இயக்குநர்கள் பட்டியலில் வைக்காதது குறித்து இயக்குநர் சுந்தர் சி பேசிய கருத்துகள் வைரலாகி வருகிறது.
மதகஜராஜா வெற்றி விழாவில் சுந்தர் சி கூறுகையில், "கமர்ஷியல் படங்கள் பெரிய வெற்றி அடையும், ரசிகர்கள் ரசிப்பார்கள். கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு வருவார்கள். ஆனால் என் விஷயத்தில், எனக்கு உள்ளுக்குள் சின்னதாக வருத்தம் இருக்கிறது.
அது என்னவெனில், எனக்கான பெரிய பாராட்டுகள் இருக்காது. நல்ல இயக்குநர்கள் என்ற பட்டியல் போட்டார்கள் என்றால் இத்தனை ஹிட் படங்கள் கொடுத்தும் அதில் என் பெயர் இருக்காது என்று கூறியுள்ளார்.
அத்துடன், சினிமா என்பது மிகப்பெரிய வியாபாரம். லட்சக்கணக்கானோர் ஈடுபடுகிற, அவர்களது வாழ்க்கையை நிர்ணயிக்கிற ஒரு வியாபாரம். மிகப்பெரிய பொழுதுபோக்கு சாதனம். அதைத்தாண்டி கோடிக்கணக்கான மக்கள் நம்மை நம்பி காசு கொடுத்து 03 மணி நேரம் அவர்களது கவலைகளை எல்லாம் மறந்து இருக்க வருகிறார்கள்.
என்னதான் கமர்ஷியல் திரைப்படங்கள் என்ற டேக் இருந்தாலும், 30 வருடங்களாக மக்கள் ஆதரவுடன் இதுவரையில் இருக்கிறேன் என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
மேலும், தனது மனதிற்குள் இன்னும் சின்ன வருத்தம் இருக்கிறது. அதற்கான இடம் இன்னும் கிடைக்கவில்லையோ என்று. அதற்காக கவலையும் படுவதில்லை. என் கடன் பணி செய்து கிடப்பதுதான். அதுதான் என் கொள்கை" என்று இயக்குநர் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.
English Summary
Director Sundar C about madha kaja raja part 02