ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் திருவிழா | 37 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி: கதிர்காமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் செடல் திருவிழாவை முன்னிட்டு நாளை (09.02.22) கதிர்காமம், முத்திரபாளையம், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 37 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை -  பள்ளி கல்வித்துறை 

மேலும் ஒரு முக்கிய செய்தி : புதுச்சேரியில் துறை ரீதியிலான போட்டித் தேர்வு நடத்தி உதவியாளர் தேர்வு செய்யலாம் என்ற துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு எதிராக, புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டம் குறித்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தெரிவிக்கையில், "உதவியாளர் பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்பினால் காலியாகும் எழுத்தர் பணியிடங்களில் புதுச்சேரி மக்கள் வேலைவாய்ப்பு உறுதியாகும். 

குருப் சி-யில் இடஒதுக்கீடு இருப்பதால், இந்த தேர்வில் நாடு முழுவதும் இருந்து பங்கேற்க இயலாது.

இந்திய அரசின் விதிமுறைக்கு மாறாக புதுச்சேரியில் அறிவிப்புகள் வெளியாவதை தலைமைச் செயலாளரிடம் தெரிவித்தோம். 

இதிலிருந்து புதுச்சேரிக்கு விலக்கு தருவது தொடர்பாக யூபிஎஸ்சிக்கு கடிதம் எழுதுவதாக அவர் எங்களிடம் உறுதியளித்தார்." என்று தெரிவித்தனர்.
 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Govt School Leave Puducherry


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->