ஊழல் செய்வது யாராக இருந்தாலும் இந்த நிலைதான்... அமித்ஷா தாக்கு.!
Home minister Amit shah speech
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டதை கண்டித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மறைமுகமாக குறிப்பிட்டு, ஊழல் செய்பவர் யாராக இருந்தாலும் அவர் சிறையில் அடைக்கப்படுவது உறுதி என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியிருப்பதாவது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவசரகால நிலைமையை நாட்டில் பிரகடனப்படுத்தினார். இதன் மூலம் லட்சக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
எனவே ஜனநாயகத்தை பற்றி பேசுவதற்கு ராகுல் காந்திக்கு எந்த ஒரு உரிமையும் இல்லை. பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக பொதுமக்கள் தயாராகிவிட்டனர். ஊழல் செய்பவர் யாராக இருந்தாலும் அவர் சிறையில் அடைக்கப்படுவது உறுதி என தெரிவித்துள்ளார்.
English Summary
Home minister Amit shah speech