எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய வெளிச்சந்தைகளில் இரு மடங்கு விலை கொடுத்த இந்தியா.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் போரின் காரணமாக ரஷ்யா மீது உலக நாடுகள் பொருளாதார தடை விதித்தன. இந்த பொருளாதார தடையினால் ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு எரிவாயு மற்றும் கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் ரஷ்யா வழங்கி வந்தது.

இந்நிலையில் தொடர்ந்து நடைபெற்று வரும் உக்ரைன் போரினால் ரஷ்யாவில் எரிவாயு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. மேலும் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரினால் சர்வதேச சந்தைகளில் எரிவாயு விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இதனால் இந்தியாவில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் எரிவாயு தேவையை பூர்த்தி செய்வதற்காக ஜெர்மனியின் காஸ்ப்ரோம் நிறுவனத்திடம் இந்தியாவின் கெயில் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன்படி, காஸ்ப்ரோம் நிறுவனத்திடமிருந்து மூன்று கப்பல்களுக்கான எரிவாயு சரக்குகளை கடந்த ஆண்டை விட இரு மடங்கு விலை கொடுத்து இந்தியா வாங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India paid double price for gas supply


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->