காசா நிலைமை குறித்து இந்திய வெளியுறவுத்துறை நினைப்பது என்ன?
Indian Ministry of External Affairs felt bad about situation Gaza
கடந்த மார்ச் 1-ம் தேதி, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில், காசா மீது நேற்று இஸ்ரேல் கடுமையாக தாக்குதல் நடத்தியது.இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் அதிகமானோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் இதில் 413 பேரின் உடல்கள் கிடைத்துள்ளதாகவும், பல உடல்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி இன்னும் 59 இஸ்ரேலிய பணயக் கைதிகளை ஹமாஸ் தன்வசம் பிடித்து வைத்துள்ளது.இந்நிலையில், காசா நிலவரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை:
அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது," காசாவின் நிலைமை குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம். அனைத்து பணயக் கைதிகளும் விடுவிக்கப்படுவது முக்கியம். காசாவிலுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளது.
மேலும் இதுபோன்ற கொடூர தாக்குதலால் மக்கள், குழந்தைகள் என ஏராளமானோர் இறப்பது கவலை அளிக்கிறது என மக்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சங்களை தெரிவித்து வருகின்றனர்.இதற்கு இந்தியா நாடு சார்பாக ஏதாவது செய்ய முடியுமா? என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
English Summary
Indian Ministry of External Affairs felt bad about situation Gaza