இசைஞானி இளையராஜாவை, தந்தை மற்றும் சகோதரியுடன் நடிகர் சூர்யா நேரில் சந்திப்பு....!!! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


சுமார் 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து இசைஞானி இளையராஜா தனது நீண்ட இசைப்பயணத்தில் சாதனை படைத்துள்ளார்.மேற்கத்திய இசை மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர் இளையராஜா.

இதனால் மொசார்ட் உள்ளிட்ட மேற்கத்திய இசை ஜாம்பவான்களின் சிம்பொனி இசைக் கூறுகளை தனது பாடல்களில் பயன்படுத்தி பாமர மக்களும் அவற்றை ரசிக்கும் வகையில் மெட்டுகளை அமைத்தார்.

மேலும் இவரது இசையால் பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக மாறியுள்ளன.அதுமட்டுமின்றி இவரது  பாடல்கள் அனைத்தும் இன்றைய தலைமுறையையும் கவரும் வகையில் அமைந்துள்ளன.

சமீபத்தில் லண்டனில் 'வேலியண்ட்' (Valiant) சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா மற்றொரு சாதனையைப் படைத்தார்.இந்த  நிலையில், லண்டனில் 'சிம்பொனி' இசையை அரங்கேற்றம் செய்து சென்னை திரும்பியுள்ள இளையராஜாவை நேரில் சந்தித்து நடிகர் சூர்யா  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யாவுடன் தந்தையும் நடிகருமான சிவகுமார்  மற்றும் தங்கை பிருந்தா ஆகியோர் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.இளையராஜாவை நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார் நடிகர் சிவகுமார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Suriya with his father and sister meets musician Ilayaraja


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->