மூன்று வேளையும் இப்படி சாப்பிட்டு பாருங்கள் - ஒரே மாதத்தில் உடல் எடை குறையும்..!
tips of weight loss
உடல் எடையைக் குறைப்பதற்காக பல்வேறு தரப்பினரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், உணவுகளின் மூலம் உடல் எடையைக் குறைப்பது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
காலை :- உடல் எடையை குறைக்க விரும்புவோர் காலை உணவாக இட்லி சாப்பிடலாம். இட்லியை நிறைய சட்னியுடன் சாப்பிடுவதற்குப் பதிலாக, நிறைய காய்கறிகள் கொண்ட சாம்பாருடன் சாப்பிடலாம். காய்கறிகளுடன் உப்புமா அல்லது அதுகுல உப்புமா செய்து சாப்பிடலாம்.

மதியம் :- வறுத்த உணவுகளைக் குறைக்க வேண்டும். ஆனால், கிரில் செய்யப்பட்ட கோழி அல்லது மீனை நீங்கள் சாப்பிடலாம். மதியம் சாப்பிடும் சாதத்தின் அளவு 200 கிராமுக்கு குறைவாக இருக்க வேண்டும்.
நீங்கள் காய்கறிகளை சாப்பிடலாம், இரண்டு வகையான காய்கறிகள் மற்றும் மூன்று வகையான கறி. புரதச்சத்துக்குப் பருப்பை எடுத்துக் கொள்ளலாம்.
இரவு : இரவு நேரத்தில் இரண்டு இட்லி அல்லது சப்பாத்தி சாப்பிடலாம். காய்கறிகள் மற்றும் புரதத்தை உண்ணலாம்.