சாதி தெரியாத ராகுல்! மோடி பகிர்ந்த வீடியோ! உரிமை மீறல் நோட்டீஸ்! - Seithipunal
Seithipunal


ராகுல் காந்தியின் ஜாதி குறித்த சர்ச்சை பேச்சை சமூக வலைதளங்களில் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று மக்களவையில் பேசிய ராகுல் காந்தி இந்தியா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று மக்களவையில் பேசினார். அதனைத் தொடர்ந்து பேசிய பாஜக எம். பி அனுராக் தாக்கூர், ஜாதி என்னவென்றே தெரியாதவர்கள் எல்லாம் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள் என்று காட்டமாக தெரிவித்து இருந்தார்.

அவரது இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உடனடியாக ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மக்களவையில் பெரும் அமளில் ஈடுபட்டது.

அதன்பின் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் என்னை அவமதிங்கள் ஆனால் இதே அவையில் நாடு முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பதற்கான சட்டத்தை ஏற்றுவேன் என்று பதில் அளித்தார். இதனை எதிர்க்கட்சி எம்.பிகள் அனைவரும் மேசையை தட்டி வரவேற்றனர். 

அதன் பின்னர் ராகுலின் ஜாதி குறித்து அனுராக் தாக்கூர் சர்ச்சைக்குரிய பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இந்தநிலையில் நீக்கப்பட்ட பேச்சு அடங்கிய வீடியோ காட்சிகளை பிரதமர் நரேந்திர மோடி சமூக வலை பக்கத்தில் பகிர்ந்து " இதை கட்டாயம் கேளுங்கள் "என்று பதிவிட்டு இருந்தார்.

இந்தநிலையில் மறுபடியும் மக்களவை கூறியதும், பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி சரண் ஜித் சிங் சன்னி உரிமை மீறல் தீர்மான நோட்டீசை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வழங்கினார். அதில் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட கருத்துக்களின் ஒரு பகுதியை பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதள பக்கமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் நடத்தை விதி 222 இன் உரிமை மீறி உள்ளது. நடத்தை விதிகளின்படி இது உரிமை மீறலுக்கு சமம் இதனால் பிரதமர் நரேந்திர மோடியின் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Infringement notice against Prime Minister Modi for sharing Rahul Gandhi caste controversy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->