ரயில் பயணிகளுக்கு வெளியான உற்சாக செய்தி.! இந்திய ரயில்வே அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


வெளிநாடுகளைப் போலவே செல்லப் பிராணிகளை வளர்க்கும் பழக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. அன்றாடம் நாய்களை நடைபயணம் அழைத்துச் செல்வதை பலர் வாடிக்கையாக கொண்டிருப்பர். 

சில நேரங்களில் நீண்ட பயணங்கள் மேற்கொள்ளும்போது தங்களது செல்லப் பிராணிகளை வீட்டில் தனியே விட்டுவிட்டு செல்லும் நிலை ஏற்படும். ஒருவேளை உடன் அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் கூட, போக்குவரத்து சேவைகளில் அதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. 

இத்தகைய நிலையில், இந்த உரிமையை இந்தியன் ரயில்வே நிர்வாகம் அவர்களுக்கு வழங்கியுள்ளது. தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளை உடன் அழைத்துச் செல்ல விரும்பும் நபர்கள் பிரேக் வேன்(நாய் பெட்டி) அல்லது இரண்டாம் வகுப்பு பெட்டியில் நாய்களை அழைத்துச் செல்லலாம். 

ரேபிஸ் தொற்று ஏற்பட்டால் நாம் ஏன் இறக்கிறோம்.! நமது உடலில் ஏற்படும்  மாற்றங்கள் என்ன?.!! - Seithipunal

நீங்கள் வளர்க்கின்ற நாய்களை உங்களுடனேயே அழைத்துச் சொல்ல வேண்டும் என்றால், நான்கு இருக்கைகள் கொண்ட கேபின் அல்லது இரண்டு இருக்கைகள் கொண்ட முதல் வகுப்பு ஏசி பிரிவில் பயணச்சீட்டு புக் செய்து செல்ல பிராணிகளை அழைத்துச் செல்லலாம். 

ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் முதல் நாய் பெட்டியில் அழைத்துச் செல்ல வசூலிக்கப்படுகிறது. அல்லது உங்கள் உடனேயே செல்லப்பிராணியை அழைத்துச் செல்ல வேண்டும் என்றால் கிலோவுக்கு 60 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

முன்கூட்டியே பதிவு செய்யவில்லை என்றால் லக்கேஜ் அளவைவிட ஆறு மடங்கு அபராதம் விதிக்கப்படும். ரயில் புறப்படுவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக கவுண்டரில் பதிவு செய்து கொள்ளலாம். 

இந்தப் பயணங்களின் போது செல்லப்பிராணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் ரயில்வே நிர்வாகம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது." என்று தெரிவித்துள்ளது. இது தற்போது பலருக்கும் மகிழ்ச்சியூட்டும் அறிவிப்பாக இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

irctc announcement about dog reservation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->