பெண்களுக்கு எதிரான குற்றத்திற்கு மரண தண்டனை - முதல்வர் தாக்கல் செய்த சட்ட திருத்தம் நிறைவேற்றம்.!
law brought by cm stalin passed death penalty to womens crimes
இந்த ஆண்டிற்கான முதல் சட்டசபைக் கூட்டம் கடந்த 6-ந்தேதி தொடங்கியது. ஒவ்வொரு வருடமும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவது வழக்கம். அதன் படி இந்த முறை சட்டசபைக்குள் நுழைந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, உரையாற்றாமல் அவையில் இருந்து வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதன் பிறகு சட்டசபை முன்னாள் உறுப்பினர் மறைவு குறித்து இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து சட்டசபையில் வினாக்கள்-விடைகள் நேரத்தில் சட்டசபை உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
இந்த நிலையில், பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை மற்றும் தண்டனையை அதிகரிக்கும் இரண்டு சட்ட மசோதாக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்திருந்தார்.
இந்த சட்ட மசோதாக்கள் மீது இன்று எம்.எல்.ஏ.க்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அதன் பின்னர் முதலமைச்சர் கொண்டு வந்த சட்டமுன்வடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
English Summary
law brought by cm stalin passed death penalty to womens crimes