போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக சமரசமற்ற போராட்டம் அவசியம்: மத்திய உள்துறை அமைச்சர்..! - Seithipunal
Seithipunal


'போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக, அவசியம் நடவடிக்கை எடுக்க வேண்டும், இப்போது நாம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மிகவும் மோசமாகிவிடும்,' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

டில்லியில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்.சி.பி.,) ஏற்பாடு செய்த “போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு” என்ற பிராந்திய மாநாடு நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு அமித் ஷா பேசியுள்ளார். 

அப்போது அவர் மேலும் பேசுகையில், இந்திய மக்கள் தொகையில் ஏழு சதவீதம் பேர் போதைக்கு அடிமையானவர்கள். இந்தியாவின் எதிர்கால சந்ததியினரைப் பாதுகாக்க போதைப்பொருட்களுக்கு எதிராக சமரசமற்ற போராட்டம் அவசரமாக தேவை.

கடந்த பத்தாண்டுகளில் , ரூ.56,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள 24 லட்சம் கிலோகிராம் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.2,411 கோடி மதிப்புள்ள 44,792 கிலோ பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் அடுத்த இரண்டு வாரங்களில் எரிக்கப்படும்.

போதைப்பொருள் முழு தலைமுறையையும் அழிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது, எந்தவொரு நாடும் அதன் இளைஞர்கள் போதைப் பழக்கத்தில் சிக்கினால் பாதுகாப்பாக இருக்க முடியாது.

ஒரு கிலோகிராம் போதைப்பொருள் கூட எல்லைக்குள் நுழைவதையோ அல்லது வெளியேறுவதையோ தடுப்பதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று அமித் ஷா கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Uncompromising fight against drug trafficking is necessary says Amit Shah


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->