ஒளிமயமான எதிர்காலத்திற்கு... இதற்க்கு வாக்களியுங்கள்- ஜெகன்மோகன் பேச்சு.!
Jagan Mohan reddy speech
மக்களவைத் தேர்தலுக்கான 4 ஆம் கட்ட வாக்கு பதிவு 96 தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. மாலை 6:00 மணி வரை நடைபெற உள்ள இந்த வாக்குப்பதிவில் ஆந்திராவில் முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள் என பலரும் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடப்பா தொகுதியின் ஜெயமஹால் வாக்குச்சாவடியில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தனது வாக்கினை செலுத்தினார்.
இந்தத் தொகுதியில் காங்கிரஸின் ஓய்.எஸ். ஷர்மிளா, தெலுங்கு தேசம் கட்சி பூபேஷ் சுப்பராமி ரெட்டி, ஒய்.எஸ்.அவினாஷ் ரெட்டி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் வாக்கை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் சந்தித்த ஜெகன்மோகன் ரெட்டி, கடந்த 5 ஆண்டுகளில் ஆட்சியை பார்த்து விட்டீர்கள்.
இந்த ஆட்சியில் பலன் அடைந்ததாக நீங்கள் நினைத்தால் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும் இந்த ஆட்சிக்கு வாக்களிக்கலாம் என வாக்காளர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.