52 கிராமங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு ஜல் ஜீவன் திட்டம் அசத்தல்..! - Seithipunal
Seithipunal


மத்திய அரசால் ஆகஸ்ட் 15, 2019 அன்றுஅறிவிக்கப்பட்ட திட்டம் தான் ஜல் ஜீவன். இந்த பணியின் நோக்கம், 2024ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமப்புற குடும்பங்களுக்கும் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்குவது தான். 

இந்த திட்டத்தின் மூலம், இதுவரை நாட்டில் 52 சதவீதத்துக்கும் அதிகமான கிராமப்புற குடும்பங்களுக்கு இப்போது குழாய் வழி நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜல் ஜீவன் திட்டம் வெற்றியடைந்தால், ஆண்டுக்கு 1.36 லட்சம் குழந்தைகளின் உயிரிழப்புகள் தடுக்கப்படும் என்று சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- "ஜல் ஜீவன் மிஷன் மூலம் வழங்கப்படும் நீர் நுண்ணுயிரியல் மாசுபாடு இல்லாததாக இருத்தல் வேண்டும்.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவதன் மூலம், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் நான்கில் ஒன்றாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அசுத்தமான நீரால் ஏற்படும் குழந்தை இறப்பைக் குறைப்பதற்கு, மிகவும் செலவு குறைந்த வழிகளில் ஒன்றாக தண்ணீர் சுத்திகரிப்பு திட்டம் உள்ளது. 

குழாய் நீர் என்பது நீரின் தரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான வழியாகும். அதே வேளையில், பொதுவான ஓரிடத்தில் நீர் சுத்திகரிக்கப்பட்டு பின், குழாய்களில் நீண்ட தூரம் செல்லும்போது, குழாய்களில் எதிர்மறை அழுத்தம் நீர் மாசுபாட்டை ஏற்படுத்தும்.

மத்திய அமைச்சகத்துடன் இணைந்து இந்த முயற்சியில் உதவுவோம். தண்ணீரின் தரத்தை சுத்திகரிப்புக்கான சாத்தியமான தீர்வுகளை பரிசோதிப்பதன் மூலம் இந்த முயற்சியில் நாங்கள் உதவுகிறோம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jal jeevan scheame water pipe connection in 52 village


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->