பரபரப்பில் தேர்தல் களம் - திடீரென பாஜகவில் இணைந்த ஆளும்கட்சி எம்.எல்.ஏ.!!
jarkhant mla dinesh williams marandi joined bjp
81 தொகுதிகாலை உடைய ஜார்கண்ட் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதில் முதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதையடுத்து இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 23-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதற்கிடையே, அம்மாநிலத்தின் பகூர் மாவட்டம் லிதிபரா தொகுதி எம்.எல்.ஏ.வாக ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த தினேஷ் வில்லியம்ஸ் மராண்டி செயல்பட்டு வந்தார்.
அவருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், விரக்தியில் இருந்த ஆளும் கட்சி எம்.எல்.ஏ. தினேஷ் வில்லியம்ஸ் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து விலகி லிதிபரா தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பா.ஜ.க. மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான சிவராஜ் சிங் சவுகான் முன்னிலையில் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.
திடீரென பா.ஜ.க.வில் இணைந்துள்ள தினேஷுக்கு நடப்பு தேர்தலில் லிதிபரா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
jarkhant mla dinesh williams marandi joined bjp