நாளை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் நிர்வாகி சுட்டு படுகொலை!
Jharkhand Congress member killed in gun fire
ஜார்கண்ட் மாநிலத்தில் நாளை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் நிர்வாகி சுட்டு படுகொலை செய்த சம்பவம், பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம், ராம்ஹர் சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏ மம்தா தேவி. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு இரண்டு பேரை கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனை அடுத்து மம்தா தேவியின் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டதால், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, நாளை இந்த தொகுதிக்கு வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், பட்ரது நகர காங்கிரஸ் நிர்வாகி கிஷோர் என்பவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் நேற்றிரவு சுமார் எட்டு மணி அளவில் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
English Summary
Jharkhand Congress member killed in gun fire