தப்பித்தது ஆட்சி! நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற ஹேமந்த்! - Seithipunal
Seithipunal


ஜாா்க்கண்ட் மாநிலத்தில் 81 உறுப்பினா்களைக் கொண்ட ஜாா்க்கண்ட் சட்டப் பேரவையில் ஜேஎம்எம் கட்சிக்கு 27 எம்எல்ஏக்கள், காங்கிரஸுக்கு 17, ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு 1, பாஜகவுக்கு 24 எம்எல்ஏக்கள் உள்ளனா்.

தற்போது, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.

கடந்த ஜனவரி மாதம் நில மோசடியுடன் தொடா்புடைய சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஜூன் 28-ஆம் தேதி அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், ஜார்க்கண்ட் முதல்வராக பதவி வகித்து வந்த சம்பயி சோரன் ராஜிநாமா செய்தாா். 

இதனைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு மீண்டும் முதல்வராக ஹேமந்த் சோரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு பதவியேற்றாா்.

இந்த நிலையில், ஜார்க்கண்ட் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளார்.

45 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஹேமந்த் சோரன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் 81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைகள், 45 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஹேமந்த் சோரன் தனது வெற்றியை பதிவு செய்துள்ளார்.

ஜார்க்கண்ட் முதலமைச்சராக மீண்டும் பதவி ஏற்ற ஹேமந்த் சோரனின் அரசு மீது இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற நிலையில், ஹேமந்த் சோரன் அமைச்சரவை விரிவுபடுத்த உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jharkhand hemant soren wins


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->