நீதித்துறை தூய்மையாகவும் நேர்மையாகவும் புனிதமாகவும் இருக்க வேண்டும் - மம்தா பானர்ஜி!
Judiciary should be pure honest and holy Mamata Banerjee
நீதித்துறை எங்களுக்கு முக்கியமான கோவில். நீதித்துறை முற்றிலும் நேர்மையாகவும் புனிதமாகவும் இருக்க வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நீதித்துறை வளர்ச்சிகள் குறித்த கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேற்குவங்க முதலமைச்சரின் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார். கருத்தரங்கில் மம்தா பானர்ஜி பேசகையில், நீதித்துறை எங்களுக்கு கோவில். இது மந்திர் மற்றும் குருத்வாரா போன்றது.
மக்களுக்கான நீதியை வழங்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நீதித்துறை மக்களுக்காக செயல்படும் என்று நம்புகிறேன். யாரையும் இழிவுபடுத்துவது எனது நோக்கம் அல்ல. ஆனால் நீதித்துறையில் அரசியல் சார்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீதித்துறை தூய்மையாகவும் நேர்மையாகவும் புனிதமாகவும் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
English Summary
Judiciary should be pure honest and holy Mamata Banerjee