நடிகை கங்கனா அறையப்பட்ட விவகாரம், குல்விந்தர் கவுர் செய்த ட்வீட் - Seithipunal
Seithipunal


18வது மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகியா நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது. பிரதமர் மோடி மீண்டும் மூன்றாவது முறை ஆட்சி அமைக்க உள்ளார். வரும் 9ம் தேதி, பிரதமர் அமைச்சரவை எம்.பி.க்கள் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணத்தை மேற்கொள்வார்கள்,  சண்டிகர் விமான நிலையத்தில் கங்கனா ரணாவத்தை அறைந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. CISF  கான்ஸ்டபில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதை பற்றி குல்விந்தர் கவுர் தனது க்ஸ் தளத்தில் புதிய ட்வீட் ஒன்றை ட்வீட் செய்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

CISF  கான்ஸ்டபில் குல்விந்தர் தற்போது செய்துள்ள ட்வீட் , 'முகலாய பேரரசரை அவரது கல்லறையில் இருந்து வெளியே கொண்டு வந்து பழிவாங்கும் அதே விவசாயி சமூகத்தின் மகள் நான். என்ன செய்தாலும் அதற்கு நாம் மட்டுமல்ல நமது வருங்கால சந்ததியினரும் பழிவாங்குவார்கள். CISF  கான்ஸ்டபிலின் இந்த ட்வீட் மிக வேகமாக வைரலாகி வருகிறது. 

சண்டிகர் விமான நிலையத்தில் கங்கனா ரணாவத்தை அறைந்த CISF கான்ஸ்டபில் குல்விந்தர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சிஐஎஸ்எஃப் ஜவான் குல்விந்தர் கவுர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது. 

சண்டிகர் விமான நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தால் கங்கண ரணாவத் மிகவும் வேதனை அடைந்தார். தேர்தலில் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றதில் கங்கனா மிகவும் மகிழ்ச்சியடைந்தார், ஆனால் இப்போது அவர் எங்கு சென்றாலும், அறைதல் சர்ச்சை குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kangana ranawat slaped at airport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->