மசூதிகளை இடித்துவிட்டு மீண்டும் கோயில்களை எழுப்புவோம் - ஈஸ்வரப்பா பரபரப்பு பேச்சு.!!
karanata ex minister esvarappa speech in karnataga haweri
மசூதிகளை இடித்துவிட்டு மீண்டும் கோயில்களை எழுப்புவோம் - ஈஸ்வரப்பா பரபரப்பு பேச்சு.!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹவேரியில் பாஜக சார்பில் கூட்டம் நடைபெற்றது. தொண்டர்கள் மத்தியிலான இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
“முகலாயர் ஆட்சிக் காலத்தில் இந்துமதக் கோயில்கள் அனைத்தும் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் மசூதிகள் எழுப்பப்பட்டன. தற்போது அந்த மசூதிகளை இடித்துவிட்டு மீண்டும் கோயில்களை எழுப்பப்படும்” என்று தெரிவித்தார்.
இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதணை பேசிய ஈஸ்வரப்பா ஏப்ரல் மாதம் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தவர். தற்போது கட்சிப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் ’மசூதியில் ஒலிக்கும் பாங்கு காரணமாக தலைவலி வருகிறது’ என்று ஈஸ்வரப்பா சமீபத்தில் பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, ஹவேரியில் பேசிய ஈஸ்வரப்பா, காங்கிரஸ் கட்சியையும், இஸ்லாமியர்களையும் ஒரே தட்டில் வைத்து தாக்கினார்.
மேலும், ஈஸ்வரப்பா கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமியர்கள் இல்லையென்றால் காங்கிரஸ் கட்சி இல்லை. காங்கிரஸ் இஸ்லாமியர்களை நம்பியே கட்சி நடத்துகிறது. காங்கிரஸ் கட்சி இந்து வெறுப்பின் அடிப்படையில் எப்போதும் செயல்படுகிறது” என்றெல்லாம் குற்றம் சாட்டி பேசியுள்ளார்.
English Summary
karanata ex minister esvarappa speech in karnataga haweri