கேரளாவை கதிகலங்க வைக்கும் டெங்கு, காலரா...  ஒரே நாளில் 11 பேர் பலி! பீதியில் மக்கள்.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு காய்ச்சல் பரவி பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். டெங்கு, காலரா, எலி காய்ச்சல் போன்ற காய்ச்சல் மக்களை தாக்கியுள்ளதால் மாநிலத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளிலும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 

இதில் 438 பேர் டெங்கு அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எலி காய்ச்சல் மற்றும் காலரா காய்ச்சலால் தலா 4 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நேற்று ஒரே நாளில் 11 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்களது பகுதிகளில் சுகாதார துறையினர் முகாமிட்டு தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 

திருவனந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் காப்பகத்தில் இருப்பவர்களுக்கு காலரா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்குள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதில் 26 வயது வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனை தொடர்ந்து சுகாதாரத் துறையினர் அந்த பகுதியிலும் முகாமிட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala cholera dengue spread 11 people died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->