கேரளாவில் கொட்டித்தீர்க்கும் கனமழை: ''மஞ்சள் அலர்ட்''... 11 பேர் உயிரிழப்பு.!  - Seithipunal
Seithipunal


வங்க கடலில் நிலவும் குறைந்த தாழ்வு காற்றழுத்த தாழ்வு காரணமாக கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தால் சாலைகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இதற்கிடையே கனமழை மற்றும் மிக கனமழை காரணமாக இதுவரை 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் திருவனந்தபுரம், ஆலப்புழா, கொல்லம், எர்ணாகுளம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு உள்ளிட 7 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Heavy rain  11 people died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->