ஓணம் பண்டிகை எதிரொலி - கேரளாவில் களைகட்டிய மது விற்பனை.!
liquar sales increase in kerala for onam festival
இந்தியாவில் பண்டிகை நாட்களில் மது விற்பனை வழக்கத்தை விட அதிகளவில் நடைபெறும். அந்த வகையில், கேரளா மாநிலத்தில் புகழ் பெட்ரா பண்டிகையான ஓணம் திருவிழாவை மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வர்.
இந்த நிலையில் கேரளாவில் ஓணம் பண்டிகையின் எதிரொலியாக மதுபானங்கள் விற்பனை எப்படி உள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது. அதாவது, இந்தாண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கடந்த செப்டம்பர், 6ம் தேதி முதல் 17ம் தேதி வரை, 818.21 கோடி ரூபாய் மது விற்பனையாகி, சாதனை படைத்துள்ளது.
கடந்தாண்டு மது விற்பனை ரூ.116 கோடியாக இருந்தது. இந்தாண்டு ஒன்பது நாட்களில், ரூ.701 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் விற்பனை செய்யப்பட்ட ரூ.715 கோடியை விட சற்று குறைவாகவே விற்பனையாகியுள்ளது.
இருப்பினும் அடுத்த 3 நாட்களில் மது விற்பனை சூடுபிடித்துள்ளது. இதன் மூலம், இதுவரை இல்லாத வகையில், 818.21 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
English Summary
liquar sales increase in kerala for onam festival