ஜம்மு காஷ்மீரில் முழு அடைப்பு...பஹல்காம் தாக்குதலை கண்டித்து வணிகர்கள் போராட்டம்! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து  ஜம்மு காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றுவருகிறது.

 காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இதில்40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
மேலும் மீட்பு பணிக்காக ஹெலிகாப்டரும் அனுப்பிவைக்கப்பட்டது. 20-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு பஹல்காம் ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 29 பேர் பலியாகி உள்ளனர். மேலும் காயம் அடைந்த 13 பேரில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்தநிலையில், ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷியா, ஈரான், சவுதி அரேபியா, இத்தாலி, உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பஹல்காம் தாக்குதலை கண்டித்து ஜம்மு காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.அதன்படி இன்று பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து ஜம்மு காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பொதுமக்களும் வணிகர்களும் தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்து பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.மேலும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lockdown in Jammu and Kashmir Traders protest against Pahalgam attack


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->