களக்காடு தலையணை சுற்றுலா பகுதிகளிலும் 28 வகையான பிளாஸ்டிகளுக்கு தடை! - Seithipunal
Seithipunal


களக்காடு சரணாலயம், களக்காடு தலையணை சுற்றுலா பகுதிகளிலும் மேற்சொன்ன 28 வகையான பிளாஸ்டிகளுக்கு தடை விதித்து துணை இயக்குனர் மற்றும் வன உயிரின காப்பாளர்  உத்தரவிட்டுள்ளார்.

ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்யவும்,குடிநீர் பாட்டில், பைகள் அடங்கிய பொருட்கள் அடங்கிய சுற்றுலா பைகளை வாடகைக்கு விடும் திட்டத்தை அமல்படுத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு உட்பட்ட சுற்றுலா பகுதிகளில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.அந்த உத்தரவின் அடிப்படையில் களக்காடு சரணாலயம் களக்காடு தலையணை சுற்றுலா பகுதிகளிலும் மேற்சொன்ன 28 வகையான பிளாஸ்டிகளுக்கு தடை விதித்து துணை இயக்குனர் மற்றும் வன உயிரின காப்பாளர்  உத்தரவிட்டுள்ளார்.

எனவே களக்காடு தலையணை சூழல் சுற்றுலா பகுதிக்கு வருகை புரியும் பொதுமக்கள் மேற் சொன்ன 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களை சுற்றுலா தலமான களக்காடு தலையணை பகுதிக்குள் பயன்படுத்துவதை தவிர்த்து வனத்துறை நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு  கேட்டுக்கொள்ளப்பட்டது என துணை இயக்குனர் மற்றும் வன உயிரின காப்பாளர்  உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kalakkad pillow tourism bans 28 types of plastic


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->