அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியம்.. முதலமைச்சர் ஆலோசனை..!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் பேசிய அவர் "அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் கிடைக்கும். அதன்படி ஒரு அரசு ஊழியர் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 50 சதவீத தொகையை ஓய்வூதியமாக பெற உரிமை உண்டு.

மாநில அரசுகள் பழைய ஓய்வில் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தினால் அவற்றின் நிதிநிலை பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது குறித்து மகாராஷ்டிரா மாநில அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. முந்தைய மகா விகாஸ் அகாதி அரசு கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் நிலை என்ன..?  என மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கேள்வி எழுப்பி உள்ளார். மத்தியில் ஆளும் பாஜக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து வரும் நிலையில் அதன் கூட்டணி ஆளும் மகாராஷ்டிராவில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra govt ready to implement old pension scheme


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->