ஆளுநர் மீது பாலியல் புகார்! அவதூறாக பேசக்கூடாது! மம்தாவுக்கு நீதிமன்றம் உத்தரவு! - Seithipunal
Seithipunal


ஆளுநருக்கு எதிராக அவதூறாக எந்த கருத்தையும் மம்தா பானர்ஜியும் அவரது கட்சியை யாரும் தெரிவிக்கக் கூடாது என கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்கம் மாநில கவர்னர் சிவி ஆனந்த போஸ் மீது கவர்னர் மாலையில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். ஆளுநர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அந்தக் குற்றச்சாட்டை ஆளுநர் சிவி ஆனந்த போஸ் மறுத்தார். மேற்குவங்க மாநில பல்வேறு அரசியல் கட்சி சேர்ந்தவர்கள் இந்தக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ஆளுநர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியதாவது, கவர்னர் மாளிகைக்கு செல்வதற்கு பெண்கள் பயப்படுகிறார்கள் என்று பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்தில் நடந்து முடிந்த இடைதேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர். இரண்டு பேருக்கும் பதவி பிரமாணம் செய்து வைக்காமல் கவர்னர் காலம்தாழ்த்தி வந்தாக கூறப்படுகிறது. இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் ஆளுநர் பாலியல் புகார் விவகாரம் தொடர்பாக கவர்னரை கடுமையாக விமர்சித்தனர்.

மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்த ஆளுநர் சிவி ஆனந்த போஸ் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கினை விசாரணை  செய்த நீதிமன்றம் ஆளுநருக்கு எதிராக அவதூறாக எந்த கருத்தையும் மம்தாவும் அவரது கட்சியினரும் பேசக்கூடாது என உத்தரவிட்டு உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mamata Banerjee can make any defamatory comments against the Governor the court said


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->