3பெண்களை ஏமாற்றி 4திருமணம் செய்த வாலிபர் கைது!
Man arrested for cheating 3 women and marrying 4 women
ஏற்கனவே 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டு 4-வதாக பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டை மாவட்டம் கோன்னி பிராமடத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி தீபு பிலிப்,35 வயதான இந்த வாலிபர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காசர்கோடு வெள்ளரிக்குண்டு பகுதியைச்சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தார். அப்போது அந்த பெண் உடன் சில ஆண்டுகள் குடும்பம் நடத்திய நிலையில், வாலிபர் வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை திருடி விட்டு மற்றொரு பெண்ணுடன் தலைமறைவானார். தலைமறைவான வாலிபர் அந்தப்பெண்ணை திருமணம் செய்து தமிழ்நாட்டில் வாழ்ந்தார் என கூறப்படுகிறது .
![](https://img.seithipunal.com/media/o79pgvt4-7u43m.png)
இதையடுத்து பின்னர் அந்தப்பெண்ணையும் கைவிட்டு விட்டு மீண்டும் கேரளாவுக்கு வந்து எர்ணாகுளத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்து அவருடன் சிறிதுகாலம் வாழ்ந்து வந்தார்அந்த வாலிபர் . அதனை தொடர்ந்து அவர் மீதான மோகம் தணிந்ததும் தீபு பிலிப் மீண்டும் தனது லீலைகளை காட்ட தொடங்கினார். இந்தநிலையில் தீபு பிலிப்புக்கு ஆலப்புழையை சேர்ந்த விவாகரத்தான ஒரு பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு அவரையும் திருமணம் செய்து அர்த்துங்கல் என்ற இடத்தில் வாழ்ந்து வந்தார் என தெரியவந்தது.
இந்தநிலையில் தீபு பிலிப் லீலைகளை கண்டுபிடித்து மீது சந்தேகமடைந்த 4-வது மனைவி கோன்னி போலீசில் புகார் செய்தார்.அப்போது புகாரின்பேரில் தீபு பிலிப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது விசாரணையில் அவர் ஏற்கனவே 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டு 4-வதாக இந்தப்பெண்ணை ஏமாற்றியதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து தீபு பிலிப்பை போலீசார் கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
Man arrested for cheating 3 women and marrying 4 women