வேறொருவருடன் தொடர்பு இருப்பதாக கூறி தங்கையை கொலை செய்த அண்ணன் கைது.! - Seithipunal
Seithipunal


வேறொருவருடன் தொடர்பு இருப்பதாக கூறி தங்கையை கொலை செய்த அண்ணன் கைது.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் தாய் இறந்ததனால் சிறுமி ஒருவர் , சகோதரர் மற்றும் அண்ணியுடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமியின் தந்தை தனது சொந்த ஊரில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சிறுமிக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதாக அவருடைய சகோதரனுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், அவர் சகோதரி என்று கூட பார்க்காமல், சிறுமியை துன்புறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல், அந்த சிறுமியின் உடலில் கம்பியால் சூடு வைத்து சித்திரவதையும் செய்துள்ளார். 

தொடர்ந்து நான்கு நாட்கள் சித்திரவதை செய்ததால் அந்த சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த சிறுமி நேற்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து சிறுமியைக் கொன்றவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for kill sister in maharastra


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->