அல்வா கிண்டும் நிர்மலா சீதாராமன்! ஜூலை 23 பட்ஜெட் தாக்கல்!
Monsoon parliamentary session begins tomorrow
மழைக்கால பாராளுமன்ற கூட்டத் தொடர் நாளை தொடக்கம் ஜூலை 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆண்டு தோறும் பிப்ரவரி 1 ஆம் தேதி பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வது வழக்கம். இந்தாண்டு 18வது மக்களவை தேர்தல் நடைபெற இருந்ததால் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 18-வது மக்களவைத் தேர்தலில் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்து மீண்டும் ஆட்சியை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்க வைத்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது.
கடந்த மதம் மக்களவையின் முதலாவது கூட்டத்துடன் நடைபெற்றது. வெற்றி பெற்ற அனைவரும் புதிய எம்பிகள் ஆக பதவி ஏற்று கொண்டனர். பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகளுக்கும் ஆளுங்கட்சிகளுக்கும் நடந்த விவாதத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. பின்னர் பாராளுமன்ற கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 22 ஆம் தேதி தொடங்கும் எனவும் வரும் ஜூலை 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் மத்திய அரசு கடந்த ஜூலை -6 ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.
பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது ஆட்சி காலத்தில் முதல் பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். மழைக்கால கூட்டத்தொடரில் 6 புதிய மசோதாக்கள் தாக்கல் செய்து அவற்றை நிறைவேற்றுவதற்காக முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாளை பாராளுமன்றத்தில் மழைகால கூட்டத்தொடர் தொடங்குகிறது.
English Summary
Monsoon parliamentary session begins tomorrow