மக்களவைக்கு "ரீ நீட்" டீ ஷர்ட் அணிந்து வந்த பீகார் எம்.பி.!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நேற்று 18-வது மக்களவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இடைக்கால சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார். நேற்று பிரதமர் மோடி உள்பட 279 பேர் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர்.

இதைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக பதவிப்பிரமாணம் நடைபெற்றது. அப்போது, தமிழக எம்.பி.க்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில், பீகார் மாநிலத்தின் பூர்னியா தொகுதியில் சுயேட்சை எம்.பி.யாக வெற்றி பெற்ற ராஜேஷ் ரஞ்சன் என்கிற பப்பு யாதவ் இன்று பதவியேற்றுக் கொண்டார். 

அப்போது அவர், ரீ-நீட் என்ற எழுத்துக்கள் அச்சடிக்கப்பட்ட டீ சர்ட்டை அணிந்திருந்தார். சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததால் மாணவர்கள் நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mp pappu yadav mp wear re neet t shirt in lok shaba


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->