நள்ளிரவில் தீப்பிடித்து எறிந்த கார்..மழையை பொருட்படுத்தாமல் உதவிய மும்பை முதலமைச்சர்..!
mumbai chiefminister help people
நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் மும்பை வில்லே பார்லே பகுதியில் மேற்கு விரைவு சாலையில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரின் எதிர்புற சாலையில் வந்த கார் நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
இதை கவனித்த முதலமைச்சர் உடனடியாக அவரது காரை நிறுத்தினார். அப்போது லேசான மழை பெய்து கொண்டு இருந்தது. எனினும் அவர் பாதிக்கப்பட்ட நபரை அழைத்து யார், எங்கு செல்கிறீர்கள் போன்ற விவரங்களை கேட்டார்.
அதற்கு கார் ஓட்டுநர், ஒர்லி பகுதியை சேர்ந்த விக்ராந்த் ஷிண்டே என்று தெரிவித்தார். இதையடுத்து முதலமைச்சர், டிரைவர் மற்றும் காரில் வந்தவர்களை தீப்பிடித்து எரியும் வாகனம் அருகே செல்ல வேண்டாம், உயிர் தான் முக்கியம் என அறிவுரை கூறினார்.
பின்னர் அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவிகளை செய்வதாக உறுதியளித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
English Summary
mumbai chiefminister help people