ஜான்சன் பேபி பவுடர் விற்பனைக்கு தடையில்லை... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலம் முலந்தில் உள்ள ஆலையில் குழந்தைகளுக்கான பவுடரை உற்பத்தி செய்கிறது. கடந்தாண்டு செப்டம்பரில் மகாராஷ்டிரா அரசு ஜான்சன் & ஜான்சன் ஆலைக்கான உரிமை ரத்து செய்து உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதித்தது. இதனை எதிர்த்து அந்நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள் "கடந்த 2018ம் ஆண்டிற்கு பிறகு எடுக்கப்பட்ட மாதிரிகளை மகாராஷ்டிரா அரசு இதுவரை ஏன் பரிசோதனை செய்யவில்லை..? இந்த விவகாரத்தில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை தன் வரம்பை மீறி செயல்பட்டதாக தெரியவந்துள்ளது. எறும்பை கொல்வதற்கு மிகப்பெரிய சுத்தியல் தேவையா..?

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் பொழுது கடந்த மாதம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் சோதனையில் நிர்ணயிக்கப்பட்ட அளவில் அமிலத்தன்மை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் மகாராஷ்டிரா அரசு பிறப்பித்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன. இதன் மூலம் நிறுவனத்தின் பொருட்களுக்கான உற்பத்தி மற்றும் விற்பனை மீதுள்ள தடை நீக்கப்படுகிறது. மேலும் புதிய மாதிரிகளை பெற்று 2 அரசு மற்றும் ஒரு தனியார் பரிசோதனை மையத்தில் மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும்" என மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MumbaiHC order no ban on sale of Johnson baby powder


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->