இன்று ஞாயிறு விடுமுறை எதிரொலி!...கன்னியாகுமரியில் அலைமோதும் சுற்றுலா பயணிகள்! - Seithipunal
Seithipunal


இன்று ஞாயிறு விடுமுறை என்பதால், காலையில் இருந்தே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்

தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், கடலின் நடுவே உள்ள  விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கம்.

இந்தநிலையில் இன்று ஞாயிறு விடுமுறை என்பதால், காலையில் இருந்தே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். முன்னதாக நள்ளிரவு முதல் காத்திருந்த சுற்றுலா பயணிகள், காலை நேரத்தில் வந்த சூரிய உதயத்தை கண்டு கழித்து மகிழ்ந்தனர்.

குறிப்பாக காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், திரிவேணி சங்கமம் கடற்கரை, சுனாமி நினைவுப் பூங்கா மற்றும் தமிழன்னை பூங்கா, அரசு அருங்காட்சியகம் உள்ளிட்ட  அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

மேலும் கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகம் காணப்படுவதால், போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today is a sunday holiday tourists flock to kanyakumari


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->