பசுக்களை கடத்தியதாக இஸ்லாமியர்கள் எரித்துக் கொலை..? பிரபல யூடியூப்பர் மீது வழக்கு பதிவு..!! - Seithipunal
Seithipunal


ஹரியானா மாநிலத்தில் காரில் வைத்து இஸ்லாமிய இளைஞர்கள் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர் பஜ்ரங் தளம் அமைப்பை சேர்ந்த பிரபல யூடியூபர் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ராஜஸ்தானைச் சேர்ந்த நசீர் மற்றும் ஜூனைத் என்ற இளைஞர்களை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர்களை தேடி வந்துள்ளனர். அவர்கள் இருவரும் ஹரியானாவில் காரில் வைத்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட ஜூனைத் மீது பசுக்களை கடத்தியதாக குற்றச்சாட்டுகள் இருந்தது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் பஜ்ரங் தளம் கட்சியை சேர்ந்த பசு பாதுகாவலர்கள் இரு இளைஞர்களையும் கொலை செய்ததாக பாதிக்கப்பட்ட குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் ரின்கு சாய்னி என்பவரை கைது செய்த போலீசார் பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களில் மோனு மனேசர் என்பவர் பிரபல யூடியூபர் என்பதும் அவர் பசு பாதுகாப்பு குறித்து பல வீடியோக்களை யூடியூபில் வெளியிட்டதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் ஹரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Murder case file against famous YouTuber in Haryana


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->