வரலாற்றில் இன்று : இந்திய எரிசக்தி சேமிப்பு தினம்...!!
national energy saving day 2021
இந்திய எரிசக்தி சேமிப்பு தினம் :
எரிபொருள் பயன்படாத துறையே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். முக்கியமாக பெட்ரோலியம் மற்றும் நிலக்கரியின் பயன்பாடு மிக அதிகமாக இருக்கிறது.
இன்னும் சிறிது நாட்களில் இந்த எரிபொருட்கள் இந்த பூமியில் தீர்ந்து போய் நமக்கு கிடைக்காமல் போகும் அபாயம் இருக்கிறது. எனவே, நிலைமையை சமாளிக்க எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
அதனால், எரிசக்தி சேமிப்பை வலியுறுத்தும் வகையில் தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் டிசம்பர் 14ஆம் தேதியும், எரிசக்தி சேமிப்பு வாரம் டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 21ஆம் தேதி வரையும் அனுசரிக்கப்படுகின்றன.
விஜய் அமிர்தராஜ் :
டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் 1953ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி சென்னையில் பிறந்தார்.
இவர் 1970ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை உலக அளவில் டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொண்டார். 1974ஆம் ஆண்டு மற்றும் 1987ஆம் ஆண்டு இறுதிப் போட்டியை அடைந்த ஐனெயைn னுயஎளை ஊரி குழுவுக்குத் தலைமை தாங்கினார். இவர் உலகத்தின் 16வது சிறந்த ஆட்டக்காரராக இருந்தார்.
இவர் தொலைக்காட்சி விளையாட்டு விமர்சகராகவும், நிகழ்ச்சிகளை தயாரிப்பவராகவும் உள்ளார். திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். ஐ.நா சபையின் கௌரவ தூதராக போஸ்னியா நாட்டில் பணிபுரிந்தார்.
English Summary
national energy saving day 2021