சினிமா, அரசியல் புள்ளிகளுடன் தொடர்பு.. சொகுசு பங்களாவில் NCB-யிடம்‌ சிக்கிய ஜாபர் சாதிக்.!! - Seithipunal
Seithipunal


கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் பறிமுதல் செய்யப்பட்ட 2000 கோடி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மூன்று நபர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வந்தனர். 

இந்த நிலையில் அவர் இன்று மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்திய மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு துறை அதிகாரி சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். 

ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளித்த மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குனர் ஞானேஷ்வர் சிங் "ஜாபர் சாதி கடந்த மூன்று ஆண்டுகளில் 3500 கிலோ போதை பொருளை கடத்தியுள்ளார். இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா போன்ற நாடுகளுக்கு அவர் போதை பொருளை கடத்தியுள்ளார். 

போதைப் பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை அவர் ரியல் எஸ்டேட், கட்டுமானம், சினிமா துறைகளில் முதலீடு செய்துள்ளார். திமுகவில் முக்கிய நிர்வாகிகளுடன் தொடர்பு வைத்துக்கொண்ட ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தலில் சம்பாதித்த பணத்தை அரசியலுக்கும் செலவு செய்துள்ளார்.

பிரபல தொழிலதிபர்கள் சினிமா பிரபலங்கள் என பல முக்கிய நபர்களுடன் ஜாபர் சாதிக்கிற்கு தொடர்பு இருப்பது தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஜாபர் சாதிக்கு உடன் தொடர்பில் இருந்த அனைத்து நபர்களுக்கும் சமன் அனுப்பப்பட்டு முறையாக விசாரணை நடத்தப்படும். இந்த வகை போதை பொருளை  கடத்தினால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரை சில தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது" என விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NCB explain about jaffar Sadiq arrest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->