சர்ச்சையான பாடங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த NCERT !! - Seithipunal
Seithipunal


மீண்டும் மாற்றப்பட்ட NCERT பாட புத்தகம். தற்போது 12 ஆம் வகுப்பு CBSE புத்தகத்தில், சர்ச்சையான பாபர் மசூதி இடிப்பு மற்றும் பாஜக தலைவர் லால் கிருஷ்ண அத்வானியின் ராம ரத யாத்திரை பற்றிய குறிப்பை மாணவர்களால் படிக்க முடியாது. அதை தற்போது பாட திட்ட குழு நீக்கியுள்ளது, பாபர் மசூதிக்குப் பதிலாக, மாணவர்கள் இப்போது மூன்று குவிமாடங்களைக் கொண்ட அமைப்பைப் பற்றி படிப்பார்கள்.

இந்த மாற்றம் குறித்து NCERT  இயக்குனர் தினேஷ் பிரசாத் சக்லானி பள்ளிகளில் கலவரம் கற்பிக்கக்கூடாது என்று தெரிவித்தார். நாட்டின் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நேர்மறை குடிமக்களாக உருவாக்கப்பட வேண்டும், வன்முறை மற்றும் மனச்சோர்வடைந்தவர்களாக இருக்கக்கூடாது.

NCERT தொடர்ந்து நான்காவது முறையாக புத்தகங்களின் பாடத்திட்டத்தை மாற்றியுள்ளது. CBSE 12ம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகத்தில் இருந்து பாபர் மசூதி, பகவான் ராம், ஸ்ரீ ராம், ரத யாத்திரை, கர்சேவா, இடிப்புக்குப் பின் நடந்த வன்முறை பற்றிய தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன.

பாபர் மசூதிக்குப் பதிலாக, மூன்று குவிமாடம் கொண்ட அமைப்பு புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. இம்முறை அயோத்தி சர்ச்சைக்கு பதிலாக அயோத்தி விவகாரம் என குறிப்பிடப்பட்டுள்ளது .

பைசாபாத் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 1986 பிப்ரவரியில் மசூதியின் பூட்டுகள் திறக்கப்பட்ட பிறகு இரு தரப்பும் அணிதிரண்டது பற்றிய விரிவான தகவல்கள் பழைய புத்தகத்தில் இரண்டு பக்கங்களுக்கு மேல் இருந்தன.

அதில் வகுப்புவாத பதற்றம், சோம்நாத்தில் இருந்து அயோத்தி வரை ரத யாத்திரை, கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பரில் ராமர் கோவில் கட்ட தன்னார்வலர்களின் கரசேவா, மசூதி இடிப்பு மற்றும் 1993ஆம் ஆண்டு ஜனவரியில் நடந்த வகுப்புவாத வன்முறை பற்றி அந்த பாடத்தில் இருந்தது.

NCERT இயக்குனர் புத்தகங்களில் உள்ள திருத்தங்களை ஒரு சாதாரண செயல்முறை என்று விவரிக்கிறார் மற்றும் பள்ளி புத்தகங்களில் ஏன் கலவரங்கள் பற்றி கற்பிக்க வேண்டும் என்று கூறுகிறார்? நாங்கள் நேர்மறையான குடிமக்களை உருவாக்க விரும்புகிறோம்.

நமது மாணவர்கள் ஆக்ரோஷமாக, சமூகத்தில் வெறுப்பை உண்டாக்கும் வகையில் அல்லது வெறுப்புக்கு ஆளாகும் வகையில் கற்பிக்க வேண்டுமா? இதுதான் கல்வியின் நோக்கமா? இப்படிப்பட்ட சிறு குழந்தைகளுக்கு கலவரம் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டுமா? அவர்கள் வளரும்போது அதைப் பற்றி அறியலாம் ஆனால் ஏன் பள்ளி பாடப்புத்தகங்களில்? அவர்கள் வளரும்போது என்ன நடந்தது, ஏன் நடந்தது என்பதைப் புரிந்து கொள்ளட்டும் என்று தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ncert made a full stop to controversial subject


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->