பேருந்து கட்டணம் அதிகரிக்குமா? - விளக்கமளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர்..! - Seithipunal
Seithipunal


நேற்று பெங்களூருவில் கர்நாடக மாநில போக்குவரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- 

"கர்நாடக மாநிலத்தில் ஆதிதிராவிடர்களுக்கான இட ஒதுக்கீட்டை 15-ல் இருந்து 17 சதவீதமாகவும், பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 3-ல் இருந்து 7 சதவீதமாகவும் உயர்த்த மாநில அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது. இதற்கான அவசர சட்டம் கூடிய விரைவில் பிறப்பிக்கப்படும். 

இதையடுத்து, அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்து 9-வது அட்டவணையில் இட ஒதுக்கீடு அதிகரிப்பை சேர்ப்பதற்கு முடிவு செய்துள்ளோம். இதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதேபோல், பிற மாநிலங்கள் இட ஒதுக்கீடு அமலில் உள்ளது குறித்தும் நாங்கள் ஆய்வு செய்துள்ளோம். 

இதையடுத்து கர்நாடக மாநிலத்தில் 9 லட்சம் கிலோ மீட்டர் தூரம் ஓடிய பேருந்துகள் நிறுத்தப்பட்டு, புதிதாக 4 ஆயிரம் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். இதுகுறித்து முதலமைச்சரிடம் எடுத்து கூறியுள்ளோம். இதற்கு அவர் ஒப்புதலும் வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம். 

இதுமட்டுமின்றி, கனிமவளத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை கொண்டு கல்யாண-கர்நாடக பகுதிக்கு புதிதாக 600 பேருந்துகளை வாங்க முடிவு செய்துள்ளோம். 

இதைத்தொடர்ந்து, வருகிற 2030-ம் ஆண்டுக்குள் கர்நாடகாவில் படிப்படியாக டீசல் பேருந்துகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டு மின்சார பேருந்துகள் இயக்கப்படும். இதற்காக புதிதாக 2,000 பேருந்து டிரைவர்களை நியமிக்கவும் முடிவு செய்துள்ளோம். அந்த டிரைவர்கள் அனைவரும் வெளி ஒப்பந்தத்தின்  அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள். 

கர்நாடக மாநிலத்தில் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தினமும் ரூ.100 கோடி இழப்பு ஏற்படுகிறது. இருப்பினும், ஊழியர்களுக்கு காலம் தவறாமல் சம்பளம் வழங்கி வருகிறோம். போக்குவரத்து கழகங்களின் மேம்பாட்டிற்கு மாநில அரசு ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 

இதனால், கர்நாடக மாநிலத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை. அதனால் பொதுமக்கள் அனைவரும் அச்சப்பட தேவை இல்லை. சேவை மனப்பான்மையுடன் செயல்படுவதால் மக்களுக்கு சுமையை ஏற்படுத்த விரும்பவில்லை" என்று போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near banglore karnataka transport minister press meet


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->