குஜராத் : தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதித்த அதிசய கிராமம்.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் மாவட்டத்தில் "ராஜ் சமதியாலா" என்ற கிராமம் உள்ளது. ராஜ்கோட்டில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள இந்த கிராமத்தில் மொத்தம் 1,700 பேர் உள்ளனர். அவர்களில், 995 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

இந்த கிராமத்திற்குள் எந்தவொரு அரசியல் கட்சியினரும் நுழையவும் முடியாது, பிரசாரம் செய்யவும் முடியாது. ஏனென்றால், இந்த கிராமத்திற்குள் அரசியல் கட்சியினரை பிரசாரம் செய்வதற்கு விட்டால், அந்த பகுதிக்கு அவர்கள் ஏதாவது தீங்கு விளைவித்து விடுவார்கள் என்று அந்த கிராமத்தினர் நினைக்கின்றனர்.

இந்த கிராமத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதித்தது மட்டுமின்றி, யாரேனும் வாக்களிக்க வரவில்லை என்றால், அவர்களுக்கு ரூ.51 அபராதமும் விதிக்கப்படும் என்ற விதிமுறை உள்ளது. 

இந்த விதிமுறை தேர்தல் நேரத்தில் அதிக அளவில் வாக்கு பதிவு இருக்க வேண்டும் என்பதற்காக கிராம வளர்ச்சி குழுவால் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல விதிகளை அந்த கிராமத்தினர் உருவாக்கி வைத்துள்ளனர்.

இதன் காரணமாக, இந்த கிராமத்தில் ஏறக்குறைய 100 சதவீதம் வாக்கு பதிவு நடைபெறுகிறது. அத்துடன் கிராம தலைவர் கூட ஒருமித்த ஒப்புதலின் பேரிலேயே தேர்ந்தெடுக்கப்படுகிறார். மேலும், கிராம மக்கள் ஒருவேளை வாக்களிக்க முடியவில்லை எனில், குழுவிடம் அதற்கான காரணம் பற்றி தெரிவிக்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near gujarat election campaign not allowed in raj samathiyala village


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->