குடும்பம் நடத்த இடையூறாக இருந்த தம்பி.!  துண்டு துண்டாக வெட்டி ஏரியில் வீசிய அக்கா.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள விஜயபுரா மாவட்டத்தில் பட்ட தேவனாங்காவ் கிராமத்தைச் சேர்ந்தவர் சித்தப்பா பூசாரி மகள் பாக்கிய ஸ்ரீ. இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த சங்கரப்பா தளவார் என்பவரைக் காதலித்து வந்துள்ளார்.

பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்வதற்கு முடிவு செய்துள்ளனர். ஆனால், இவர்களது திருமணத்திற்கு பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், இருவரும் பிரிந்து சென்றனர்.

இதற்கிடையே சங்கரப்பா தளவாருக்கு திருமணம் ஆகி ஆறு மாதத்தில் மனைவியைப் பிரிந்து, ஜிகினி தொழில் பேட்டைக்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது, தனது முன்னாள் காதலியான பாக்கிய ஸ்ரீயிடம் செல்போனில் பேசி வந்துள்ளார். நாளடைவில் இவர்கள் இருவரும் ஒரே அறையில் தங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளனர். 

இதையடுத்து, இவர்கள் இருவரும் ஜிகினி தொழில் பேட்டையில் வெவ்வேறு தொழிற்சாலைகளில் வேலை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் பாக்கிய ஸ்ரீயின்  தம்பி தனது அக்காவைத் தேடி ஜிகினி பகுதிக்கு வந்துள்ளார். அங்கு தனது அக்கா முன்னாள் காதலன் சங்கரப்பாவுடன் சேர்ந்து வாழ்ந்து வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதன் பின்னர் லிங்கராஜ் தனது அக்காவிடம் சங்கரப்பாவுடன் நீ சேர்ந்து வாழக்கூடாது என்று எச்சரித்துள்ளார். இது தொடர்பாக லிங்கராஜ் தனது அக்காவிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த பாக்கிய ஸ்ரீ தனது காதலர் சங்கரப்பாவுடன் சேர்ந்து லிங்கராஜை அடித்து கொலை செய்து அவரது உடலை 20 துண்டுகளாக வெட்டி அருகிலுள்ள ஏரியில் வீசியுள்ளனர்.

அதன் பின்னர் இரண்டு பேரும் அங்கிருந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் பகுதிக்கு தப்பிச் சென்று தலைமறைவாக அங்கேயே வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர். இதற்கிடையே இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக ஜிகினி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

அதில், லிங்கராஜை கொலை செய்தது அக்காவும் அவரது காதலரும் தான் என்பதும், இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தலைமறைவாகி இருப்பதும் தெரியவந்தது. இதைதொடர்ந்து போலீசார் மார்ச் 19ஆம் தேதி அன்று இருவரையும் கைது செய்தனர். பின்னர் இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near karnataga sister throw brother body in lake after kill


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->