மாணவி பலாத்கார வழக்கில் போலீசுக்கு தண்ணிகாட்டிய இளைஞர் கைது.!
near kerala young man arrested for sexuall harassment case
கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு பகுதியை சேர்ந்தவர் சுபாஷ். இவர் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அந்த மாணவி கடந்த 2008-ம் ஆண்டு மேல் படிப்பிற்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் வந்து சேர்ந்துள்ளார். இதனால், சுபாசும் தங்களது காதல் தொடர வேண்டும் என்று அங்கு வந்து தங்கியுள்ளார். அப்போது இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.
இதற்கிடையே சுபாஷ் ஆசைவார்த்தை கூறி அந்த மாணவியை பாலியல் பலத்தகாரம் செய்துள்ளார். இதனால், அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து அந்த மாணவி சம்பவம் குறித்து அவரது பெற்றோருக்குத் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
அதன் படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுபாசை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் சுபாஷ் ஜாமீனில் வெளியே வந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகினார்.
இதைத் தொடர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு சேலம் நீதிமன்றம் சுபாஷிற்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது. அதன் படி, தனிப்படை போலீசார் சுபாசை கடந்த பத்து ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் கேரளாவில் பதுங்கி இருந்த சுபாசை நேற்று போலீசார் கைது செய்தனர்.
English Summary
near kerala young man arrested for sexuall harassment case