ஸ்ரீ பெரும்புதூர் அருகே தொழிற்சாலை தீ விபத்து - சிகிச்சையில் இருந்த நபர் உயிரிழப்பு.!  - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ரம்பாக்கம் பகுதியில் வாகனங்களுக்கான உதிரி பாகங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இதில், வடமாநில ஊழியர்கள் உள்பட சுமார் 80-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

இந்த தொழிற்சாலையில், கடந்த 21-ந் தேதி இரவு பாய்லர் எந்திரம் திடீரென வெடித்ததனால் தொழிற்சாலை முழுவதும் தீப்பிடித்து எறிந்தது. இதைப்பார்த்து ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் தொடர்பாக தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் அளித்தனர். 

அந்த தகவலின் படி, வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதற்கிடையே, இந்த தீ விபத்தின் போது, தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த வாடா மாநில ஊழியர் உள்பட ஐந்து பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

இவர்களை தீயணைப்புத் துறை மற்றும் போலீசார் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அம்மையார் குப்பம் பகுதியை சேர்ந்த சேனாதிபதி என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

மீதமுள்ள நான்கு பேரும் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near sri perumputhur man died for factory fire accident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->