வரும் 12-ம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!
Nahur Dargah Nagapattinam local holyday
உலகப் புகழ் பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழாவை ஒட்டி, நாகை மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வரும் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 21ம் தேதி சனிக்கிழமை வேலைநாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகூர் தர்கா பெரிய கந்தூரி உத்ஸவம் 2024 நேற்று கொடியேற்ற நிகழ்சியுடன் தொடங்கி உள்ளது. வெறும் 15/12/2024 ஞாயிற்றுக்கிழமை கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.
இதனை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருச்சி, வேலூர் மதுரை, பெங்களூர், சிதம்பரம், கும்பகோணம் மற்றும் இராமநாதபுரம் ஆகிய இடங்கலிருந்து பொது மக்களின் வசதிகேற்ப 01/12/2024 முதல் நாகூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மேற்கூறிய இடங்களிருந்து www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது .
English Summary
Nahur Dargah Nagapattinam local holyday