உபியில் காவல் நிலையத்தையே ஆட்டம் காண வைத்த அதிர்ச்சி சம்பவம்.! மாறி மாறி பாலியல் புகார் அளித்த மனைவிகள்.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் நகர் சச்சேந்தி பகுதியில் காவல் நிலையத்தில் வரலாற்றிலே இல்லாத ஒரு விசித்திரமான வழக்கு பதிவாகி உள்ளது. அந்த வழக்கில், பெண் ஒருவர் தனது பக்கத்து வீட்டுக் காரர் மீது பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்து உள்ளார். 

இதற்கு எதிராக, பக்கத்து வீட்டுக் காரரின் மனைவி, புகாரளித்த பெண்ணின் கணவர் மீது பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்துள்ளார். இதற்கு முன் இதுபோன்று ஒரு வழக்கு கேள்விப்பட்டதே இல்லை என்று போலீசார் தெரிவிக்கின்றனர். 

இருப்பினும், இரண்டாவது புகார் அளித்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டு விட்டார். ஆனால், முதலில் புகார் அளித்த பெண்ணின் கணவரை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இதனால், போலீசார் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களையும் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்று உள்ளனர். 

இதற்கிடையே முதலில் புகார் அளித்த பெண், எப்.ஐ.ஆர். பதிவு செய்யாவிட்டால் தீக்குளித்து விடுவேன் என்று போலீசாரை மிரட்டியுள்ளார். இந்த புகார் பழைய பகையால் நடந்திருக்க கூடும் என்றுத் தெரிவித்தாலும், மருத்துவ அறிக்கை மற்றும் தொடர் விசாரணை முடிவிலேயே அதன் விவரங்கள் தெரிய வரும் என்று தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near uttar pradesh womans mutual complaints on neigboring husbands


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->