தடை இல்லை... நீட் தேர்வு முறைகேடு புகார் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
NEET Case SC Order june 2024
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக பதிலளிக்க தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
நீட் தேர்வு தொடர்பான அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைத்து விசாரிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வின் முடிவுகளை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் சாய் தீபக் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும், குளறுபடிகளால் நீட் தேர்வின் புனிதத் தன்மை மீது சந்தேகம் எழுந்து உள்ளதாகவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது ஆழமான கருத்தை பதிவு செய்துள்ளனர்.
மேலும் நீட் தொடர்பான வழக்குகளின் விசாரணையை வருகின்ற ஜூலை மாதம் எட்டாம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கிடையே நீட் தேர்வு தொடர்பான வழக்கில் மருத்துவ மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு உச்சநீதிமன்றம் கவுன்சிலிங் நடத்த இடைக்கால தடை விதிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்தது.
மேலும் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக பதில் அளிக்க கோரி தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஆள்மாறாட்டம், குறிப்பிட்ட தனியார் மையத்தில் இருந்து அதிகம் பேர் முதலிடம் உள்ளிட்ட அனைத்து புகார்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
NEET Case SC Order june 2024