பதவியை ராஜினாமா செய்த ஆளுநர்.! புதிய ஆளுநரை நியமனம் செய்த குடியரசுத்தலைவர்.!
new governor appointed by ram nath govind
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த 370 சிறப்பு அந்தஸ்து சென்ற ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.இதையடுத்து ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட அடுத்த மூன்று மாதங்களுக்கு பிறகு அக்டோபர் 31 ஆம் தேதி ஜம்மு&காஷ்மீரின் முதல் துணைநிலை ஆளுநராக கிரிஷ் சந்திரா மர்மு நியமணம் செய்யப்பட்டார்.
![](https://img.seithipunal.com/media/Murmu 8-bz64n.jpeg)
இதைத்தொடர்ந்து 9 மாதங்களுக்கு மேலாக ஜம்மு-காஷ்மீரின் ஆளுநராக செயலாற்றி வந்த கிரிஷ் மர்மு நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பான ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவரிடம் அவர் அளித்தார்.
குஜராத் மாநிலத்தில் 1985 ஆம் ஆண்டு இந்திய ஆட்சி பணி அதிகாரியாக தேர்வான அவர், குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை செயலாளராக இருந்தார். 2001 ஆம் ஆண்டில், நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வரான போது, முர்மு நிவாரண ஆணையராக இருந்தார். பின்னர் அவர் சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் துறைக்கான ஆணையராக இருந்தார் பின்னர் குஜராத் கடல் வாரிய நிர்வாக இயக்குனர் ஆகவும் சந்திரா மர்மு இருந்தார்.
ஜம்மு-காஷ்மீரின் முதல் துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த அவருக்கு மத்திய, மாநில அரசுகளின் வரவு,செலவு கணக்குகளை சரிபார்க்கும் மத்திய அரசின் மிக முக்கிய பொறுப்பான இந்திய தலைமை கணக்குத்தணிக்கையாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், துணை நிலை ஆளுநர் கிரீஷ் சந்திர மர்முவின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து ஜம்மு காஷ்மீரின் புதிய துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹாவை நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
![](https://img.seithipunal.com/media/rgt54t4t-39pjz.jpg)
இதுதொடர்பாக, குடியரசு தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் கிரீஷ் சந்திர மர்முவின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் துணை நிலை புதிய ஆளுநராக மனோஜ் சின்ஹாவை நியமனம் செய்துள்ளார் என தெரிவித்துள்ளது.
புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள மனோஜ் சின்ஹா மூன்று முறை எம்.பி-யாகவும் மத்திய அமைச்சாராகவும் பதிவிவகித்துள்ளார்.
English Summary
new governor appointed by ram nath govind