மம்தா பானர்ஜி கட்டாயம் பதவி விலகவேண்டும்! யாரும் எதிர்பாராத இடத்திலிருந்து வந்த கோரிக்கை! - Seithipunal
Seithipunal


மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் புகழ்பெற்ற ஆர்.சி.கர் மருத்துவ கல்லூரியில் மருத்துவ மேல் படிப்பு படித்து வந்த பெண் பயிற்சி மருத்துவர், கடந்த ஒன்பதாம் தேதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 

ஆரம்பம் முதலே பயிற்சி மருத்துவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பிலிருந்து குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இதனை மாநில அரசு மூடி மறைக்க முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. 

பின்னர், பயிற்சி பெண் மருத்துவரின் பிரேத பரிசோதனை அறிக்கை பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தன. குறிப்பாக பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதற்கிடையே, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும், போலீசாரின் விசாரணையிலும் சஞ்சய் ராய் என்பவர் இந்த படுகொலையை செய்தது தெரியவந்தது.

இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரமாகி உள்ள நிலையில், நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரும் அதிர்வலையையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இன்று நாடு முழுவதும் அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், இந்த விவகாரத்தை சரியாக கையாள தெரியாத முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என்று, நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி வலியுறுத்தியுள்ளார். 

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவிக்கையில், மம்தா பானர்ஜி தனது அதிகாரத்தை பயன்படுத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், மக்களை தவறான வழியில் நடத்த முயற்சி செய்து உள்ளார். 

மேலும் இந்த பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப, மம்தா பானர்ஜி போராட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளார். தன்னுடைய முதலமைச்சர் என்ற பொறுப்பை பயன்படுத்தி அவர் கடுமையான நடவடிக்கையை குற்றவாளிகள் மீது எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்ய தவறியதால், மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என்று ஆஷா தேவி வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nirbhaya mother say Mamata Banerjee resign


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->